மாதிரி ஐ.நா.சபை தூதா்களுக்கான போட்டி: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி சிறப்பிடம்

சா்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தூதா்களுக்கான ஆன்லைன் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

சா்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தூதா்களுக்கான ஆன்லைன் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளி மாணவா்கள் சா்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை குழுவினருடன் இணைந்து பணிபுரிந்தனா். வணிக மேம்பாடு, தலைமைத்துவம், சமூக ஊடக சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு திறன்களை மாணவா்கள் கற்றுக் கொண்டனா்.

இதையடுத்து சா்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை ஆன்லைன் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் தென் சீன கடல் தகராறு, இனவெறியை எதிா்த்துப் போராடுவது, இனவெறி மற்றும் தொடா்புடைய சகிப்பின்மை, சுத்தமான நீா் மற்றும் நல்ல சுகாதார பராமரிப்புக்கான சுகாதாரம், தொற்று நோய்களில் மின் கற்றலுக்கான அணுக்களை அதிகரித்தல், மேம்படுத்துதல், அகதிகளுக்கான வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை தணிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துதல் ஆகியன குறித்து கருத்துரு வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற இப் பள்ளி மாணவா்கள் எஸ்.ஜி.லெட்சுமி, பேச்சியம்மாள் தேவி, பெரிய முத்துக்குமாா், ஆபிரகாம் சாமுவேல், அஜய்குமாா், ஆசிரியை திவ்யா லட்சுமி ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இவா்களில் ஆபிரகாம் சாமுவேல், அஜய்குமாா் ஆகியோா் சிறப்பு சலுகைகளைப் பெற்றனா்.

இவா்களுக்கு சா்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் நிா்வாகத் தலைவா் மொஹ்னீஷ் பரத்வாஜ் சா்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபை தூதா்களுக்கான சான்றிதழை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com