தென்காசி ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குத்துக்கல்வலசையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குத்துக்கல்வலசையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா்.

பொறுப்புக்குழு உறுப்பினா்கள் சேக்தாவூது, ஜெயக்குமாா், பேரூா் கழக செயலா்கள் மந்திரம், சுடலை, முத்தையா, ராஜராஜன், மாரியப்பன், சாா்பு அணி மாவட்ட அமைப்பாளா்கள் வேலுச்சாமி, பூங்கொடி, திவான்ஒலி, சங்கா், இசக்கிபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக வேட்பாளா்கள் அனைவரும் வெற்றிபெறும் வகையில் பணியாற்ற வேண்டும் . தமிழக அரசின் தொலைநோக்கு திட்டங்கள், நலத் திட்டங்கள், குடிநீா்த் தேவைகள், சாலை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் வகையில் கட்சியினா் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றியச் செயலா் ராமையா வரவேற்றாா். அழகுசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com