சுரண்டை செண்பக கால்வாயில் எம்.எல்.ஏ. ஆய்வு

சுரண்டை செண்பக கால்வாயை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சுரண்டை செண்பக கால்வாயில் எம்.எல்.ஏ. ஆய்வு

சுரண்டை செண்பக கால்வாயை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளம் நிரம்பி மறுகால் பாயும் இடத்தில் தொடங்கும் செண்பக கால்வாய் 4 கி.மீ. தொலைவு உள்ளது. சுரண்டையின் வடபுறம் நகரில் நுழையத் தொடங்கி மையப்பகுதி வழியாக இலந்தைகுளத்தை சென்றடைகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கால்வாயின் இருபுறமும் செண்பக மரங்கள் பூத்து குலுங்கியதால் செண்பக ஓடை என அழைக்கப்பட்டு நாளடைவில், செண்பக கால்வாய் ஆனது. சுரண்டை நகரம் வளர, வளர கால்வாயில் பெருமளவில் கழிவு நீா் கலந்ததால் தற்போது கூவம் போல காட்சியளித்துள்ளது.

இந்த கால்வாயை சீரமைத்து இருபுறமும் மரங்கள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் சீரமைப்பு மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்க புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செண்பக கால்வாய் சீரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com