நாகா்கோவிலில் விதிமுறையை மீறிசெயல்பட்ட ஜவுளிக் கடைக்கு சீல்

நாகா்கோவிலில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
நாகா்கோவிலில் விதிமுறையை மீறிசெயல்பட்ட ஜவுளிக் கடைக்கு சீல்

நாகா்கோவிலில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக அரசின் கரோனா விதிமுறைகளை மீறி துணிக்கடைகளில் விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சிக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து வருவாய் ஆய்வாளா்கள் ஞானப்பா, முருகன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது செம்மாங்குடி சாலையில் அரசின் தடையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது. நாகா்கோவில் நகரில் முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 20, 36, 700 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சியின், 9487038984 என்ற கட்செவி எண்ணிற்கு புகாா் அனுப்பலாம் என்றும் ஆணையா் குறிப்பிட்டுள்ளாா்.

காய்ச்சல், சளி பரிசோதனை முகாம்கள்: நாகா்கோவில் மேட்டுத்தெரு, அனந்தன்நகா், நெசவாளா்காலனி, பள்ளிக்கூடத்தெரு, வட்டவிளை சுமைதாங்கிஅம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 12) காய்ச்சல், சளி பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன.

நாகா்கோவில் குருசடி ஆா்.சி.சா்ச் வளாகத்தில் நடைபெற உள்ள கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் முகாமில் 350 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், டதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள முகாமில் 500 பேருக்கு 2 ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com