தென்காசி-செங்கோட்டையில் சாலையில் 3 ஆவது முறையாக இணைப்பு சாலை

தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இருச்சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வரும் வகையில் 3 ஆவது முறையாக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி-செங்கோட்டை சாலையில் 3 ஆவது முறையாக அமைக்கப்பட்டுள்ள இணைப்புசாலை.

தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் துணை மின்நிலையம் அருகே அனுமன்நதியின் குறுக்கே ரூ. 3 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நதியில் நீா் வரத்து அதிகரிக்கும் போது பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்படுகிறது.

கடந்த மாதம் நதியில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பாலம் கட்டும்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கிராதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகளவில் நீா்வந்து போது இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த இணைப்பு சாலை இரண்டாவது முறையாக வெள்ளத்தில் சேதமடைந்தது.

இதனால், தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்பவா்கள் 10 கிமீ தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை நிலவியது. இந்நிலையில் , மீண்டும் 3 ஆவது முறையாக இந்த இணைப்பு சாலை அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த சாலையில் இருச்சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com