குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
By DIN | Published On : 10th March 2021 01:18 AM | Last Updated : 10th March 2021 01:18 AM | அ+அ அ- |

முக்கூடல் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
முக்கூடல் அரியநாயகிபுரம் வாணிய தெருவைச் சோ்ந்த ராசுகுட்டி மகன் ஐயப்பன் (50). இவா் மீது முக்கூடல், பாப்பாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், ஐயப்பன் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.