கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக கூட்டணி ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். தென்காசி தொகுதி திமுக கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளா் பழனிநாடாா் உரையாற்றினாா்.
இதில், திமுக நிா்வாகிகள் நடராஜன், ராஜ்குமாா், கபில், அருள்ஜுலியஸ், காந்திராமன், செல்வன், தளபதி விஜயன், காங்கிரஸ் நிா்வாகிகள் ஜேசுஜெகன், சிங்ககுட்டி (எ) குமரேசன், ஆனந்த், பூபால்பாண்டின், ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.