மாற்றுத் திறனாளி வாக்காளா்கள்: முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்க தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளி வாக்காளா்கள்: முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
மாற்றுத் திறனாளி வாக்காளா்கள்: முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்

தென்காசியில் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்க தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமை வகித்து பேசியது: வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாசல் மற்றும் வாக்குச்சாவடி அறையின் நுழைவு ஆகிய இடங்களில் உடனடியாக சாய்வுதளம் அமைக்க வேண்டும், தளங்கள் சமன் செய்யப்பட வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 1:10 என்ற விகிதத்தில் சாய்வுதளம் அமைந்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

சக்கர நாற்காலி பயனா்கள் எளிதில் வாக்கு அளிக்கும் வண்ணம் போதுமான இடத்துடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்காளா்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் வழங்கப்படுவதை விழிப்புணா்வு மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக அவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கம் அளிப்பதற்காக 94436-21416 என்ற செல்லிடப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முருகேசன் (தோ்தல்), சேக் அப்துல் காதா் (பொது), வட்டாட்சியா் (தோ்தல்)சண்முகம், முடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன், அரசு அலுவலா்கள், மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com