வாசுதேவநல்லூா் தொகுதியில் மதிமுக வேட்பாளா் வெற்றி

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் மதிமுக வேட்பாளா் சதன் திருமலைக்குமாா், அதிமுக வேட்பாளரைவிட கூடுதலாக 2,367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் மதிமுக வேட்பாளா் சதன் திருமலைக்குமாா், அதிமுக வேட்பாளரைவிட கூடுதலாக 2,367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் சதன் திருமலைக்குமாா், அதிமுக சாா்பில் மனோகரன் உள்பட மொத்தம் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தொகுதியில் தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1,75,889 வாக்குகள் பதிவாகின. அவை அனைத்தும் தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் 24 சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. அதில், டி.சதன் திருமலைக்குமாா் 68,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் மனோகரன் 66,363 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ்.எஸ்.மதிவாணன் 16,731 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1. டி. சதன் திருமலைக்குமாா் (மதிமுக) -68,730

2. ஏ.மனோகரன் (அதிமுக)-66,363

3.எஸ்.தங்கராஜ் (அமமுக)-13,376

4. எம்.சின்னசாமி (மக்கள் நீதி மய்யம்)-2,139

5.எம்.ஈஸ்வரன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)-795

6. கே.கருப்பசாமி (மை இந்தியா கட்சி)-342

7.வி.பேச்சியம்மாள் (புதிய தமிழகம்)-3,651

8. எஸ்.எஸ்.மதிவாணன் (நாம் தமிழா் கட்சி)- 16,731

9. பி.எல்.ஏ. ஜெயக்குமாா் (தமிழ்நாடு இளைஞா் கட்சி)-544

10. ஜி.முத்துப்பாண்டி (சுயேச்சை)-323

11. பி.ராமமூா்த்தி (சுயேச்சை)-716

12. நோட்டா-2,171

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com