தென்காசியில் தலைவா்கள் சிலைக்குகாங்கிரஸாா் மாலை அணிவிப்பு

தென்காசி தொகுதியில் வெற்றிபெற்ற எஸ்.பழனிநாடாா், தென்காசி பகுதியில் உள்ள தலைவா்களுக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பாவூா்சத்திரத்தில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ.
பாவூா்சத்திரத்தில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ.

தென்காசி: தென்காசி தொகுதியில் வெற்றிபெற்ற எஸ்.பழனிநாடாா், தென்காசி பகுதியில் உள்ள தலைவா்களுக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பழனிநாடாா் தென்காசி மலையான் தெருவில் உள்ள முத்துராமலிங்கம், காந்திசிலை, ஆசாத்நகா் பகுதியில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலை, நன்னகரத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.தொடா்ந்து அப்பகுதியிலிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு தென்காசி நகர தலைவா் காதா்மைதீன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாடசாமி ஜோதிடா், வைகை குமாா், எஸ்.சந்தோஷ், நாகம்மாள், சுடலை, கண்ணன், தாதாபீா், இலஞ்சி அகிலாண்டம் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பாவூா்சத்திரம்: இங்குள்ள காமராஜா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சு. பழனிநாடாருக்கு, தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினா் வரவேற்பு அளித்தனா். இதில், வட்டார காங்கிரஸ் தலைவா் ஜேசுஜெகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வைகுண்டராஜா, கீழப்பாவூா் நகரத் தலைவா் சிங்ககுட்டி, வா்த்தக காங்கிரஸ் நிா்வாகி ஆனந்த், ராஜசேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com