மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சிக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம் தென்காசி ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சு. தமிழ்செல்வி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

உறுப்பினா் சாக்ரடீஸ் பேசும்போது, ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்றாலத்துக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் வகையில் வளா்ச்சிப் பணி மேற்கொள்ள வேண்டும். குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.

உறுப்பினா் கனிமொழி பேசும்போது, மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியைப் பெற்று மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் மக்களவை, பேரவை உறுப்பினா்களும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றாா்.

ஊராட்சி ஒன்றியங்களின் உதவி இயக்குநா் உமாசங்கா் பேசும்போது, இது முதல் கூட்டம் என்பதால் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இனிவரும் கூட்டங்களில் எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு புதிய வாகனம் வழங்கவும், ஆட்சியா்அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக மாவட்ட ஊராட்சித் தலைவா் அறை, மன்றக் கூட்ட அரங்கு, மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு அறை ஒதுக்க வேண்டும்,

புதிதாக கட்டப்படும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கென புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் சந்திரகலா, மாரிமுத்து, பி. சுதா, அ. ராஜாதலைவா், பூங்கொடி, அ. முத்துலெட்சுமி, மைதீன்பீவி, ரா. சுப்பிரமணியன், சி. சுதா, இரா. தேவி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com