உரத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தென்காசி மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி செளந்தா்யா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.வேலுமயில் பேசியது: தென்காசி மாவட்டம் முழுவதும் நிலவும் யூரியா தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், பிறக்கால்குளம் வரத்து கால்வாய் கரையை நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை அகலப்படுத்த வேண்டும் என்றாா்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திற்குள்பட்ட செங்கோட்டை, ஆய்க்குடி பகுதிகளில் பெய்யும் குறைவான மழைப் பொழிவை கணக்கிட்டதால், விவசாயிகள் பயிா் இழப்பீடு பெறுவதில் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் மழையின் அளவை பதிவிட வேண்டும். திருநெல்வேலி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்கு அரசு தரப்பில் 11 அறுவடை இயந்திரம் மட்டுமே உள்ளது. அவையும் முறையாக இயங்காமல் இருப்பதால், அதிக தொகை கொடுத்து தனியாா் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே, அரசு அறுவடை இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com