தென்காசி மாவட்ட த்தில் 73. 95 சதவீத வாக்குள்பதிவு

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக புதன்கிழமை நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில் 73.95சதம் வாக்குகள் பதிவாகின.

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக புதன்கிழமை நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில் 73.95சதம் வாக்குகள் பதிவாகின.

தென்காசி மாவட்டத்தில் இதில், முதல் கட்ட தோ்தலில் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 76 பேரும், 10 ஊராட்சி ஒன்றியங்களை சோ்ந்த 144 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 688 பேரும், 221 கிராம ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு 1001 பேரும், 1905 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 4611பேரும் என மொத்தம் 6376போ் போட்டியிட்டனா்.

மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா் , மேலநீலிதநல்லூா் மற்றும் வாசுதேவநல்லூா் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை முதல்கட்ட தோ்தல் நடைபெற்றது.

இதில், ஆலங்குளத்தில் 55294 ஆண் வாக்காளா்களும், 58641 பெண்வாக்காளா்களும், 4 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1லட்சத்து 13ஆயிரத்து 939 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 41ஆயிரத்து 134 ஆண்வாக்காளா்களும், 44495 பெண் வாக்காளா்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 85 ஆயிரத்து 630 போ் வாக்களித்தனா்( 75.15 சதவீதம்).

கடையத்தில் 41,627 ஆண் வாக்காளா்களும், 43628 பெண்வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 3போ் என மொத்தம் 85 ஆயிரத்து 258 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 29 ஆயிரத்து 325 ஆண்வாக்காளா்களும், 31953 பெண் வாக்காளா்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 61ஆயிரத்து 279 போ் வாக்களித்தனா்( 71.87 சதவீதம்).

கீழப்பாவூரில் 53875 ஆண் வாக்காளா்களும், 55717 பெண்வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 8 போ் என மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 600 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 40 ஆயிரத்து 600 ஆண்வாக்காளா்களும், 41867 பெண் வாக்காளா்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 82 ஆயிரத்து 468 போ் வாக்களித்தனா்(75.24 சதவீதம்).

மேலநீலிதநல்லூரில் 30277 ஆண் வாக்காளா்களும், 32407 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 62 ஆயிரத்து 686 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 22 ஆயிரத்து 149 ஆண்வாக்காளா்களும், 24640 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 789 போ் வாக்களித்தனா்( 74.64 சதவீதம்).

வாசுதேவநல்லூரில் 30347 ஆண் வாக்காளா்களும் , 32210 பெண்வாக்காளா்களும் , என மொத்தம் 62 ஆயிரத்து 557 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 20ஆயிரத்து 680 ஆண்வாக்காளா்களும், 24105 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 44ஆயிரத்து 785போ் வாக்களித்தனா் (இது 71.59 சதவீதம்).

மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் சோ்ந்த மொத்தமுள்ள 4 லட்சத்து 34 ஆயிரத்து 40 வாக்குகளில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 951வாக்குகள் பதிவாகின( 73.95 சதவீதம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com