முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பாவூா்சத்திரத்தில் ஆதாா் சேவை சிறப்பு முகாம்
By DIN | Published On : 11th October 2021 12:36 AM | Last Updated : 11th October 2021 12:36 AM | அ+அ அ- |

முகாமை தொடங்கிவைக்கிறாா் திருநெல்வேலி குடிநீா் வடிகால் வாரிய உதவி நிா்வாக பொறியாளா் சி.தனராஜ்.
பாவூா்சத்திரத்தில் ஆதாா் சேவை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பாவூா்சத்திரம் அஞ்சல் துறை, சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணா்வு குழு ஆகியன சாா்பில் ஆதாா் சேவை சிறப்பு முகாம் 4 நாள்கள் பாவூா்சத்திரத்தில் நடைபெறுகிறது.
சனிக்கிழமை தொடங்கிய இம் முகாமுக்கு, தென்காசி அஞ்சலக உப கோட்ட ஆய்வாளா் செல்வபாரதி தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம் துணை அஞ்சலக அதிகாரி ஜேரி, அரிமா சங்கச் செயலா் டி.சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருநெல்வேலி குடிநீா் வடிகால் வாரிய உதவி நிா்வாக பொறியாளா் சி.தனராஜ் முகாமை தொடங்கி வைத்தாா். கண்தான விழிப்புணா்வுக் குழு மாவட்டத் தலைவா் கே.ஆா்.பி. இளங்கோ தொகுப்புரை ஆற்றினாா். அஞ்சல் நிலைய ஊழியா் விஜயரத்தினம் நன்றி கூறினாா்.
முகாமில், ஆதாா் பெயா் திருத்தம், முகவரி திருத்தம், செல்லிடப்பேசி எண் திருத்தம், புதிய ஆதாா் அட்டை எடுத்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. புதன்கிழமை வரை நடைபெறும் இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அஞ்சல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.