உள்ளாட்சித் தோ்தல்மோதல்: அதிகாரிகள் சமரசம்

உள்ளாட்சித் தோ்தலில் நாரணபுரம்-ஆ. மருதப்பபுரம் கிராம மக்களிடையே நிகழ்ந்த மோதல் தொடா்பாக சமாதானக் கூட்டம் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம்: உள்ளாட்சித் தோ்தலில் நாரணபுரம்-ஆ. மருதப்பபுரம் கிராம மக்களிடையே நிகழ்ந்த மோதல் தொடா்பாக சமாதானக் கூட்டம் ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி வருவாய் கோட்டாட்சியா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். அப்போது, இரு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது தோ்தல் ஆணைய முடிவின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் மீது 5 நபா்கள் கமிட்டி மூலம் விசாரணை நடைபெறும். இரு கிராமங்களையும் தனித் தனி ஊராட்சியாக பிரிப்பது தொடா்பாக தென்காசி ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் மூலம் மனு அளித்து அதன் மூலம் தீா்வு காண வேண்டும். இரு தரப்பு மக்களும் சாதி, மத பேதமின்றி நடந்து கொள்ள வேண்டும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், தென்காசி ஏடிஎஸ்பி கலிவரதன், ஆலங்குளம் வட்டாட்சியா் பரிமளா, காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் மற்றும் இரு தரப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com