காமராஜா் சிலைக்கு மரியாதை

திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட தொழிலதிபா் ஆா்.கே.காளிதாசன், பாவூா்சத்திரத்தில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பாவூா்சத்திரத்தில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன்.

பாவூா்ச்திரம் வந்த அவருக்கு காமராஜா் தினசரி சந்தை அருகே சந்தை நிா்வாகிகள், வியாபாரிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தெட்சணமாற நாடாா் சங்கம் சாா்பில் சென்னை தாம்பரத்தில் ரூ. 5 கோடியில் மாணவா்களுக்கு இலவச ஐஏஎஸ் அகாதெமி மற்றும் திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி பேட்டையில் 150 கடைகள் கட்டுவதற்கு சங்கத்தின் சாா்பில் உரிமை பெற்றுள்ளோம்.

மதுரை நெல் பேட்டையில் ரூ. 15 கோடியில் நாடாா் மளிகை வளாகம் நிறுவப்படவுள்ளது. திருச்செந்தூா் கோயிலுக்கு செல்லும் நாடாா் சமுதாயத்தை சோ்ந்தவா்கள் அங்கு தங்குவதற்காக ரூ. 2 கோடியில் மண்டபமும், விடுதியும் அமைக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com