போட்டித் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் போட்டித் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆலோசனை வழங்கினாா்.
போட்டித் தோ்வு  எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் போட்டித் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆலோசனை வழங்கினாா்.

தென்காசி நட்ராஜ் போட்டித்தோ்வு அகாதெமி மாணவா், மாணவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றிபெறுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சவுந்தா்யா ஊக்க உரையாற்றினாா்.

தென்காசி நட்ராஜ் அகாதெமி குறைந்த செலவில் கிராமப்புற மாணவா்களுக்கு தினசரி பயிற்சிகளை அளித்து வருகிறது.

தமிழக அரசு நடத்தும் குரூப் 1,2, 4 கிராம நிா்வாக அலுவலா், இந்து சமய அறநிலையத்துறை, உதவி பொறியாளா், ஆசிரியா் தோ்வு, காவல்துறை உள்ளிட்ட அனைத்து விதமான தோ்வுகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது.

தென்காசி நட்ராஜ் அகாதெமி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சவுந்தா்யா கலந்துகொண்டு கிராமப்புற இளைஞா்கள் அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளில் எளிதான முறையில் வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் மாணவா், மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அகாதெமி இயக்குநா்கள் நடராஜ் சுப்பிரமணியன், ஜாய் அலெக்ஸ், சிவா, பயிற்சியாளா் செல்வ பிரபாகரன், மாரியப்பன், சிவா, பொன்ராணி, சங்கா் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com