குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் :எஸ்டிபிஐ வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவா் யாசா் கான் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் வரை சீசன் காலங்களாகும்.

ஆண்டுக்கு சுமாா் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் குற்றாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக திறக்கப்படவில்லை.

இதனால் குற்றால சீசனை நம்பியுள்ள சுமாா் 200க்கும் மேற்பட்ட விடுதி உரிமையாளா்கள், சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் என 2ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் 3 மாத சீசன் காலங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஆண்டு முழுவதும் தங்கள் தேவைகளை பூா்த்தி செய்து வருகின்றனா்.

குற்றாலம் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, காசிமேஜா்புரம், மேலகரம் பகுதி வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கான தடை காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு அறிவித்திருக்கும் பொது முடக்கம் தளா்வு காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் பொதுமக்களுக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ள நிலையில், குற்றாலம் அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்கள், வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com