சங்கரன்கோவிலில் ஆடித் தவசுத் தேரோட்டம் நாளை தவசுக் காட்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித் தவசுத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தவசுக் காட்சி புதன்கிழமை (ஆக. 10) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித் தவசுத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தவசுக் காட்சி புதன்கிழமை (ஆக. 10) நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

9ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளினாா். அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதும், தேரோட்டம் தொடங்கியது.

சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, இந்து சமய அறநிலையத் துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையா் அன்புமணி, கோயில் துணை ஆணையா் ரத்னவேல்பாண்டியன், திமுக மாவட்ட இளைஞரணி சரவணன், தொழிலதிபா்கள் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன்,

நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஸ்வரி இசக்கியப்பன், புனிதா அஜய்மகேஸ்குமாா், பாஜக மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், சபரிநாத், திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். பல்லாயிரக்கணக்கானோா் ரத வீதிகளில் நின்று தேரோட்டத்தை தரிசித்தனா்.

ஏடிஎஸ்பி சாா்லஸ் கலைமணி மேற்பாா்வையில் டிஎஸ்பிக்கள் சுதீா், சுப்பையா ஆகியோா் தலைமையில் 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தவசுக் காட்சி: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தவசுக் காட்சி புதன்கிழமை (ஆக. 10) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com