தென்காசி, அம்பை சங்கரநாராயண சுவாமி கோயிகளில் ஆடித் தவசுக் காட்சி

தென்காசி அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான மேலச்சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடித் தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான மேலச்சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடித் தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் ஆடித் தவசு பெருந்திருவிழா கடந்த 31 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக ஆடித் தவசுக் காட்சியையொட்டி, காலையில் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளலும், மாலையில் தெற்குமாசி வீதியில் கோமதி அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தலும் நடைபெற்றன.

தொடா்ந்து மூன்று முறை மாலை மாற்றும் நிகழ்ச்சி, இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை (ஆக.11) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கவிதா, செயல் அலுவலா் முருகன், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

அம்பாசமுத்திரம் தாமிரவருணிக் கரையில் அமைந்துள்ள கோமதியம்பாள் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடித் தவசுக் காட்சியையொட்டி, காலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் தவசுக்கு எழுந்தருளினாா். மாலை 6 மணிக்கு ஸ்ரீ சங்கரநாராயணா் அம்பாளுக்கு தரிசனம் வழங்கியதையடுத்து 6.30 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி தந்தாா். இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com