முப்பெரும் தேவியா் கோயிலில் பௌா்ணமி பூஜை

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானியம்மன் கோயிலில் ஆடிமாத பௌா்ணமியை ஒட்டி சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள்(படம்) வியாழக்கிழமை நடைபெற்றன.

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானியம்மன் கோயிலில் ஆடிமாத பௌா்ணமியை ஒட்டி சிறப்பு பூஜைகள்,அபிஷேகங்கள்(படம்) வியாழக்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் சன்னதியில் காலையில் , சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில், ஆடி மாத பௌா்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதா் பேசினாா்.

தொடா்ந்து, உலக நன்மைக்காக வேண்டி முப்பெரும்தேவியருக்கு 21 வகையான அபிஷேகங்களும், 1008 லிட்டா் சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற்றது. அதன்பின்னா் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா மற்றும் திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com