சங்கரன்கோவிலில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டி

பள்ளிக் கல்வித் துறை-மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, பள்ளிக் கல்வித் துறை-மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தொடக்கிவைத்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான 35 போ் பங்கேற்றனா். வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட துணைச் செயலா் புனிதா, மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை, நகரச் செயலா் மு. பிரகாஷ், இளைஞரணி சரவணன், முத்துக்குமாா், அவைத் தலைவா் முப்பிடாதி, மாவட்ட நெசவாளா் அணி சோமசெல்வப்பாண்டியன், இளைஞரணி சரவணன், மாணவரணி காா்த்தி, அப்பாஸ் அலி, உதயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மேற்பாா்வையாளா் முத்துச்செல்வி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளா் சண்முகவடிவு உள்ளிட்ட பலா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com