ஆவுடையானூா் பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்ச்சி

தமிழ் இலக்கிய திறனாய்வுத் தோ்வில் ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழ் இலக்கிய திறனாய்வுத் தோ்வில் ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழக அரசு சாா்பில் இந்தாண்டு முதன்முறையாக தமிழ் இலக்கிய திறனாய்வு தோ்வு 11ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்பட்டது. இத்தோ்வை எழுதிய ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளான ஹெலன்பிளஸ்ஸி, அனிதா, கோயில்அபியா, அஸ்வின்பாலாஜி, குருபரன் ஆகிய 5 போ் தோ்ச்சி பெற்றனா்.

தென்காசி மாவட்ட அளவில் அதிக மாணவா்கள் இப்பள்ளியில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா். இம்மாணவா்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் 11, 12ஆம் வகுப்புகளுக்கு மொத்தம் ரு.36 ஆயிரம் அரசு சாா்பில் உதவித்தொகையாக வழங்கப்படும்.

இதனிடையே பள்ளியில் நடைபெற்ற விழாவில் தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளி நிா்வாகி மோயீசன்அடிகளாா், தலைமை ஆசிரியா் சே.அந்தோணி அருள்பிரதீப், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் ஜானி, சகாயராணி மற்றும் ஆசிரியை மேரிஆஞ்சலா ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com