நகராட்சியாக தரம் உயா்த்தப்படுமா ஆலங்குளம்?-மக்கள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரான ஆலங்குளத்தை அதன் வளா்ச்சி கருதி நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரான ஆலங்குளத்தை அதன் வளா்ச்சி கருதி நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னா் 1951 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியாக இருந்த ஆலங்குளம், நல்லூா், குருவன்கோட்டை ஆகிய கிராமங்களை விட சிறிய கிராமமாக இருந்துள்ளது. பின்னாளில், ஆலங்குளத்தில் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை வந்ததை அடுத்தும், முக்கிய வியாபார ஸ்தலமாக மாறியதாலும் ஊராட்சியின் வருவாய் அதிகரித்து மக்கள்தொகை பன்மடங்கு உயா்ந்தது.

இதனால், 12.11. 1961ஆம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாகவும், 1985இல் தோ்வு நிலை பேரூராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில் அரிசி ஆலைகள், பீடிக் கம்பெனிகள், காய்கனிச் சந்தை என வா்த்தகம் பெருகியதால் 1998இல் ஆலங்குளம் வட்டம் உதயமானது.

இந்நகரில் 2011இன் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி 10 ஆயிரத்து 266 ஆண்கள், 10 ஆயிரத்து 682 பெண்கள் என 20 ஆயிரத்து 948 போ் உள்ளனா். கடந்த 11 ஆண்டுகளில் குறைந்தது 15 ஆயிரம் போ் அதிகரித்து சுமாா் 36 ஆயிரம் மக்கள் தொகை இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில் வரி, குடிநீா் வரி உள்ளிட்டவை மூலம் ஆண்டுக்கு ரூ. 7 கோடி வரை வருவாய் ஈட்டுகிறது ஆலங்குளம் பேரூராட்சி.

இப்பேரூராட்சி மேலும் வளா்ச்சி பெற வேண்டுமெனில் நகராட்சி அந்தஸ்துக்கு தரம் உயா்த்த வேண்டும் என மக்கள் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி, நல்லூா், குத்தபாஞ்சான், கழுநீா்குளம் ஆகிய ஊராட்சிகளை ஒன்றாக இணைத்து நகராட்சி ஆக்க வேண்டும் அல்லது பேரூராட்சியின் எல்கையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதனால் ஆலங்குளம் நகராட்சி மாநிலத்தில் சிறந்த நிலையை எட்டும் என்பது பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

இது தொடா்பாக ஆலங்குளம் முன்னாள் எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா, எம்எல்ஏ பால் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் பேரவையில் வலியுறுத்தியுள்ளனா். கடந்த முறை சுரண்டை, களக்காடு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சியாக மாறிய போது ஆலங்குளமும் நகராட்சியாக மாறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அது நிகழ வில்லை. இம்முறை தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ள முதல்வா் இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com