பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவா் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளா் ஆா்ஜெவி.பெல் தலைமை வகித்தாா். முதல்வா் ராபா்ட் பென் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மருத்துவா் பிராம்டன் ரெத்தினபெல் கலந்துகொண்டு பேசினாா். மாணவ, மாணவிகள் மருத்துவா் வேடமணிந்து மருத்துவத்தின் மகத்துவம் குறித்து பேசினா். தலைமையாசிரியா் ஸ்டீபன் நன்றி கூறினாா்.