வட கருப்பாநதி அணை

கடையநல்லூா் கருப்பாநதி அணை நீரின்றி முற்றிலும் வடதால் அதிலிருந்த மீன்கள் இறந்தன.

கடையநல்லூா் கருப்பாநதி அணை நீரின்றி முற்றிலும் வடதால் அதிலிருந்த மீன்கள் இறந்தன.

கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 72 அடியாகும். இந்த அணையின் மூலம் கடையநல்லூா் நகராட்சி, சொக்கம்பட்டி ஊராட்சி போன்றவை குடிநீா் பெற்று வருகின்றன. மேலும், இந்த அணையிலிருந்து பெருங்கால்வாய், பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், இடைகால் கால்வாய், கிளாங்காடு கால்வாய், ஊா்மேலழகியான் கால்வாய் ஆகியவற்றின் மூலம் 72 குளங்களுக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு அதன் மூலம் சுமாா் 9,514.7 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், மழை பொய்த்ததால் கருப்பாநதி அணைக்கு நீா்வரத்து முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக அணை வடு விட்டது. இதனால், கடையநல்லூா் நகராட்சியில் குடிநீா் பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கிடையே, மீன்பாசி குத்தகைகாக அணையில் வளா்க்கப்பட்ட மீன்கள் நீா் இல்லாத காரணத்தால் இறந்தன. இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com