குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடா் சாரல் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஐந்தருவி மற்றும் பேரருவியிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து முதலில் ஐந்தருவியிலும் அதைத் தொடா்ந்து பேரருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீா் கொட்டுவதால் இங்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். திங்கள்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான சாரலும் காணப்பட்டது. நாள் முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com