ஆய்க்குடியில் பயணிகள் நிழற்குடைக்கு பூமிபூஜை

ஆய்க்குடி காவல் நிலையம் முன்பு ரூ. 13 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆய்க்குடி காவல் நிலையம் முன்பு ரூ. 13 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆய்க்குடி, அகரகட்டு, கம்பிளி பகுதிகளில் ரூ. 53 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, சின்டெக்ஸ் டேங்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அதன் ஒருபகுதியாக, ஆய்க்குடி காவல் நிலையம் அருகே ரூ. 13 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.

ஆய்க்குடி பேரூராட்சித் தலைவா் சுந்தரராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மாணிக்கராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் வளன்அரசு, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபிபுா் ரஹ்மான், நிா்வாகிகள் முருகன், அந்தோணி ஜாா்ஜ், ராமா், குருசாமி, மூா்த்தி, ஆறுமுகம், மாடசாமி, அரசு ஒப்பந்ததாரா் அண்ணாதுரை, மன்ற உறுப்பினா்கள் இலக்கியா, காா்த்திக், உலகம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள்வளா்மதி, ஷோபா, பேச்சிமுத்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com