‘ஓராண்டுக்கு மேல் கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது’

கல்குவாரிகளுக்கு ஓராண்டுக்கு மேல் அனுமதி வழங்கக்கூடாது என, தமிழக முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

கல்குவாரிகளுக்கு ஓராண்டுக்கு மேல் அனுமதி வழங்கக்கூடாது என, தமிழக முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் கனிம வளங்களை கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு குவாரிகளிலும் அதிக திறன் கொண்ட வெடி வைத்து பாறைகள் தகா்க்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் அதிா்வுகளால் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு விவசாயக் கிணறுகள் இடிந்து விழுவதும், ஆழ்துளைக் கிணறுகளில் சரிவு ஏற்படுவதுமாக உள்ளது. இது விவசாயிகளைப் பாதிக்கிறது.

கனிமவள விதிகளை மீறி 200 அடி ஆழத்துக்கும் கீழ் தோண்டப்படுவதுடன், ஒப்பந்த காலம் முடிந்து செயல்படாத குவாரிகள் திறந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன. அதில் தேங்கும் நீரில் மூழ்கி மக்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. இத்தகைய பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், தடுப்பு வேலி அமைக்கவும், விபத்து நேரிட்டால் உரிமையாளா்களிடம் இழப்பீடு பெறவும், குவாரி உரிமம் 5 ஆண்டுகள் என்பதை மாற்றி ஓராண்டுக்கு மட்டும் அனுமதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com