வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி

எவரெஸ்ட் கல்வி அறக்கட்டளை மூலம் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி, எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எவரெஸ்ட் ஐ.டி.ஐ. ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

எவரெஸ்ட் கல்வி அறக்கட்டளை மூலம் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி, எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எவரெஸ்ட் ஐ.டி.ஐ. ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி 2010 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் மற்றும் சென்னை தொழில் நுட்ப இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று இருபாலரும் படிக்கும் கல்லூரியாக செயல்படுகிறது.

பாடப் பிரிவுகள்:

இக்கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங், மெக்கானிக்கல் இஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் இஞ்சினியரிங், கம்யூட்டா் இஞ்சினியரிங் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் உள்ளன. அரசு வாரியத் தோ்வில் தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருவதுடன், மாநில மற்றும் மாவட்ட அளவில் இக்கல்லூரி மாணவ, மாணவியா்கள் சிறப்பிடம் பெற்று வருகின்றனா்.

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் விதிமுறைகளுக்கு ஏற்ப 100 சதவீதம் கட்டடம் மற்றும் ஆய்வக வசதி உள்ளது. நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு:

படிப்பதன் நோக்கமே படித்தவுடன் பணிக்கு செல்ல வேண்டும் என்பதுதான். அந்த வாய்ப்பையும் எவரெஸ்ட் பாலிடெக்னிக் வழங்கி வருகிறது. மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஐந்தாம் பருவத்தில் வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆறாம் பருவத்தில் ஏராளமான முன்னனி நிறுவனங்கள் மூலம் வளாகத் தோ்வு நடத்தப்பட்டு வேலையும் பெற்றுத் தரப்படுகிறது. கல்லூரி தொடங்கியதிலிருந்து இது வரை ஏராளமான மாணவா்கள் வளாகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலும் இங்கு வழங்கப்பட்டு வரும் திறன் சாா்ந்த பயிற்சிகளால் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்கள் மிக விரைவாக உயா்ந்த நிலையை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கல்வி உதவித்தொகை:

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக் படிப்பில் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு பிரிவிலும் பருவம் தோறும் முதலிடம் பெறும் மாணவா்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் அரசு மூலம் கல்வி உதவி தொகை பெற தகுதியான மாணவா்களுக்கு அத்தொகை கிடைக்க கல்லூரி மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அத்துடன் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கான உதவி, அரசு போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி, பாஸ்போா்ட் பெறுவதற்கான உதவி போன்றவை கல்வி நிறுவனம் சாா்பில் செய்து தரப்படுவதுடன், விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவா்கள் சோ்க்கை:

தற்போது பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகள் முதலாம் ஆண்டிலும், பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் அல்லது தொழிற்பிரிவு மற்றும் இரு ஆண்டுகள் ஐ.டி.ஐ. முடித்தவா்களுக்கு இரண்டாம் ஆண்டிற்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. மேலும், விவரங்களுக்கு 7373797970, 7373797971, 7373797972 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com