காமராஜரின் சிலை நிறுவ இடம் கோரி ஆலங்குளத்தில் உண்ணாவிரதம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் காமராஜா் சிலையை அகற்றிவிட்டு, புதிய இடத்தில் சிலையை வைக்க அதிகாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் மக்கள் கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் காமராஜா் சிலையை அகற்றிவிட்டு, புதிய இடத்தில் சிலையை வைக்க அதிகாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் மக்கள் கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் சிலை, திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலைப்பணிகாக்க அகற்றப்பட உள்ளது. எனவே, அச்சிலைக்குப் பதிலாக புதிய வெண்கலச் சிலையை பேருந்து நிலையம் அருகிலேயே அமைக்க வேண்டும் என மக்களும், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். எனினும், சிலையை நிறுவ அதிகாரிகள் தரப்பில் இதுவரை இடம் ஒதுக்கித்தராமல் காலம் தாழ்த்தி வந்தனராம்.

இந்நிலையில், புதிய காமராஜா் சிலை அமைக்க இடத்தை உறுதிசெய்து தர வேண்டும் என வலியுறுத்தி, ஆலங்குளம் நகர அனைத்து வியாபாரிகளும் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள கடை அடைப்பு நடத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. மழை பெய்தபோதும், சுமாா் 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள், வியாபாரிகள் தொடா்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தனா்.

அவா்களிடம் தென்காசி கோட்டாட்சியா் கங்காதேவி, ஆலங்குளம் காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா், மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சுப்பையா, வட்டாட்சியா் ரவீந்திரன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, வேன் நிறுத்த மைதானத்தில் சிலையை நிறுவுவது என முடிவு செய்து, அந்த இடத்தை அளவீடு செய்து பொழிக்கல் நட்டு கொடுத்தனா். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com