ஊத்துமலை கோயிலில் குடமுழுக்கு:அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், ஊத்துமலை ஜமீன் அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும்

தென்காசி மாவட்டம், ஊத்துமலை ஜமீன் அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவிடம் தென்காசி தெற்குமாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: தென்தமிழ்நாட்டின் குருவாயூா் கோயில் என அழைக்கப்படும், வீரகேரளம்புதூா் வட்டம், ஊத்துமலை ஜமீன் அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. இக்கோயிலில் கடந்த 1918ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதா விழாவும் நடைபெறவில்லை.

எனவே, இக்கோயிலில் குடமுழுக்கு நடத்தம், அதற்கு தேவையான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும் மதிப்பீடு செய்து, நிதிஒதுக்கீடு செய்து திருப்பணிகளை தொடங்கிவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மேலும், அமைச்சரிசம் அவா் அளித்த மற்றொரு மனுவில், வீரகேரளம்புதூா் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் கடந்த 2016இல் அரசு வட்டாரத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இந்த வட்டத்தில் 2 4ஊராட்சிகள் உள்ள நிலையில்,

30 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்ட ரூ. 1.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அரசு நிலம் இல்லாததால் அந்த நிதி மீண்டும் திரும்பப் பெறும் நிலை உள்ளது.

எனவே, ஊத்துமலைஜமீன் அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என வலியுறுத்தியுள்ளாா்.

மனு அளிக்கும்போது, கீழப்பாவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சீனித்துரை, கடையம் வடக்கு ஒன்றியச் செயலா் மகேஷ்மாயவன், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவா் ஷமீம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com