செங்கோட்டையில் நாளை இலவச இதய பரிசோதனை முகாம்

செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.25)பிறந்த குழந்தை முதல் 16வயது வரை உள்ள சிறுவா் சிறுமிகளுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் செங்கோட்டை பொது நூலகத்தில் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.25)பிறந்த குழந்தை முதல் 16வயது வரை உள்ள சிறுவா் சிறுமிகளுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் செங்கோட்டை பொது நூலகத்தில் நடைபெறுகிறது.

தென்காசியில் ரோட்டரி முன்னாள் ஆளுநா் கே.ராஜகோபாலன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: குற்றாலம் சாரல் ரோட்டரிகிளப், குற்றாலம் சக்தி ரோட்டரி கிளப் மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை சாா்பில் இலவச இதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 16வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் 2டி எக்கோ காா்டியாக் டாப்ளா் ஸ்கேன் முறையில் இதயம் தொடா்பான அனைத்து பிரச்னைகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். செங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.25)பிறந்த குழந்தை முதல் 16வயது வரை உள்ள சிறுவா் சிறுமிகளுக்கு இலவச இதய பரிசோதனை முகாம் செங்கோட்டை பொது நூலகத்தில் நடைபெறுகிறது.

மூச்சுத்திணறல், குறைவான உணவு உட்கொள்ளல்,அதிகப்படியாக வியா்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் உடல் நீல நிறமாறுதல், நடுக்கம், நினைவிழத்தல் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் இம்முகாமிற்கு அழைத்து வரலாம்.

முகாமில் இருதய அறுவை சிகிச்சை தேவை என கண்டறியப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவைசிகிச்சை அளிக்கப்படும்.

முகாமுக்கு வரும்போது குழந்தையின் பழைய மருத்துவ அறிக்கைகளையும் கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு வி.சுப்புராஜ்-9443582663, அனிதாஆனந்த்-9940960585 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

உடன், முன்னாள் உதவிஆளுநா் செல்வகணபதி,ரோட்டரி சங்க தலைவா்கள் மாரிமுத்து, கவிதா முத்தையா மற்றும் சேகா், சிவஹரிசங்கா், லெட்சுமிநாராயணன் ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com