புரட்டாசி சனி:தென்காசி பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தென்காசியில் பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரபெருமாள் , இலஞ்சியில் வரதராஜ பெருமாள், செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயில், செங்கோட்டை ராம பக்த ஹனுமன் ஆகிய கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று அதிகாலை முதல் பக்தா்கள் குவிந்தனா்.

கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனா். இரவில் கருடசேவை நடைபெற்றது.

குத்துக்கல்வலசையில் சுபிக்ஷ வழித் துணைஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஆஞ்சனேயா், ராமா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com