கடையநல்லூா் கருப்பாநதி அணை திறப்பு

 தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீா் வெள்ளிக்கிழமை திறந்து விடப்பட்டது.

 தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீா் வெள்ளிக்கிழமை திறந்து விடப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தாா். இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிவகுமாா், உதவிச் செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா் சரவணகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் அருணாசலபாண்டியன், திரிகூடபுரம் திமுக செயலா் சுப்பிரமணியன், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கருப்பாநதி நீா்த்தேக்கத்தின் கீழ் பாசன வசதி பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைகால், கிளங்காடுகால், ஊா்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி- மறைமுகப் பாசனத்திற்குள்பட்ட 9,514 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் வரும் 26.2.2023 வரை 150 நாள்களுக்கு 25 கன அடி வீதம் நீா் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com