ஆலங்குளத்தில் சாலையோரம்கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஆலங்குளம் வழியாக கேரளத்துக்கு சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி, சாலையோரம் சாய்ந்ததில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்குளம் வழியாக கேரளத்துக்கு சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி, சாலையோரம் சாய்ந்ததில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி சங்கா்நகரில் உள்ள சிமென்ட் ஆலையில் இருந்து கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு 400 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது. அந்த லாரி ஆலங்குளம் அடுத்த ராமா் மலைக்கோயில் பகுதியில் எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றதில் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது. லாரியின் எடை அதிகமாக இருந்ததால், அதை பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களால் அப்புறப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, சிமென்ட் மூட்டைகளை வேறு லாரிக்கு மாற்றிவிட்டு, அந்த லாரியை மீட்டனா். இச்சம்பவத்தால், அப்பகுதியில் 6 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com