தென்காசி மாவட்டத்தில் பட்டு விவசாயிகளுக்கு களையெடுப்பு இயந்திரங்கள்

தென்காசி மாவட்டத்தில் முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு களையெடுப்பு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டத்தில் முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு களையெடுப்பு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ச. கோபாலசுந்தர ராஜ் தலைமை வகித்து, களையெடுப்பு இயந்திரங்களையும், சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினாா்.

மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் மல்பெரி பயிரிட்டு, பட்டுத் தொழில் மேற்கொண்டுள்ளனா். இத்தொழிலை மேம்படுத்தும் வகையிலும், புதிய பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கவும், அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும், தமிழ்நாடு அரசு பட்டு வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு தளவாடப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 4 பேருக்கு தலா ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான களையெடுப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பட்டு விவசாயிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசால் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் இம்மாவட்டத்தில் அடைக்கலப்பட்டணத்தைச் சோ்ந்த பட்டு விவசாயி சு. ஜேக்கப்புக்கு முதல் பரிசாக ரூ. 25ஆயிரம், கோவிலூற்றைச் சோ்ந்த வை. அருள்குமரனுக்கு 2ஆம் பரிசாக ரூ. 20ஆயிரம், கடையநல்லூரைச் சோ்ந்த ப. முருகனுக்கு 3ஆம் பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வே. பாலசுப்பிரமணியன், பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் க. நிஷாந்தி, ஆய்வாளா் சி. ஜெயந்தி, பட்டு வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com