முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
துத்திகுளம் பள்ளியில்மஞ்சப்பை விழிப்புணா்வுப் பிரசாரம்
By DIN | Published On : 06th April 2022 12:58 AM | Last Updated : 06th April 2022 12:58 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ஆரோக்கியராசு தலைமை வகித்தாா். ஆசிரியை ஜோஸ்பின் தெரசா முன்னிலை வகித்தாா். நெகிழிப்பையை முற்றிலும் ஒழிப்போம், புவி வெப்பமயமாதலை தடுப்போம், மஞ்சப்பையைக் கையெலெடுப்போம் ஆகிய முழக்கங்களுடன் மாணவா்கள் உறுதி மொழியேற்றனா். ஆசிரியை சுதா வரவேற்றாா். ஆசிரியா் ஸ்டீபன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.