தென்காசி மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு ரூ.3.32 கோடி நிதி ஒதுக்கீடு

தென்காசி மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு ரூ3.32கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு ரூ3.32கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசிமாவட்டத்தில் கிராம அளவில் வேளாண் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள 6 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டுவதற்கு ரூ. 2.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆழ்வாா்குறிச்சி, திருவேங்கடம் ஆகிய இடங்களில் ரூ. 80 லட்சம் மதிப்பில் கட்டடப் பணிகள் முடிவடைந்துள்ளன.

மடத்துப்பட்டி, கரிவலம்வந்தநல்லூா், ஊத்துமலை, வீரகேரளம்புதூா் ஆகிய இடங்களில் ரூ1.52 கோடி மதிப்பில் கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம் ரூ. 1கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com