முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பாவூா்சத்திரத்தில் கிராம நிா்வாக அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 12:49 AM | Last Updated : 29th April 2022 12:49 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் தென்காசி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பிரபு சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் முத்துச்செல்வன், மாவட்டச் செயலா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டச் செயலா்கள் திருவேங்கடம் முத்துக்குமாா், கடையநல்லூா் காளிராஜ், ஆலங்குளம் காா்த்திகை ராஜன், செங்கோட்டை முருகேசன், தென்காசி சங்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மாவட்டத்தில் புதிதாக பணியில் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் 25 பேருக்கு நில அளவைப் பயிற்சி, நிா்வாகப் பயிற்சி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.