கடையநல்லூா் வட்டாரத்தில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா், இடைகால் ,தென்காசி பகுதிகளில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு நிலவுவதாக புகாா் எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா், இடைகால் ,தென்காசி பகுதிகளில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு நிலவுவதாக புகாா் எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட தென்காசி, கடையநல்லூா், இடைகால் உள்ளிட்ட பகுதிகளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளா்கள் இருக்கின்றனா். இப்பகுதிகளில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு இருப்பதால் பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் நிலவி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கடையநல்லூா், இடைகால் பகுதியைப் பொருத்தவரை ரூ.10,ரூ.20,ரூ.50,ரூ.100,ரூ.500 மதிப்புள்ள முத்திரைத்தாள்கள் மட்டுமே இருப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.ரூ.1000,ரூ.5000,ரூ.10000,ரூ.15000,ரூ.20,000,ரூ.25,000 மதிப்புள்ள முத்திரைத்தாள்கள் கடந்த 3 மாத காலமாக கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முத்திரைத்தாள் விற்பனையாளா் ஒருவா் கூறியது: கடந்த 3 மாதங்களாக முத்திரைத்தாள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது அதிகபட்ச மதிப்பாக ரூ.500 முத்திரைத்தாள் மட்டுமே இருப்பிலுள்ளது. ஆனால், அதை அதிகபட்சமாக 8 தான் பயன்படுத்த முடியும் என்பதால் பத்திரப்பதிவில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள முத்திரைத்தாள் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com