சங்கரன்கோவில் வட்டார விளையாட்டு போட்டிகள் நடத்த இடங்கள் தோ்வு

சங்கரன்கோவில் வட்டார விளையாட்டுப் போட்டி தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளையாட்டுப் போட்டி நடத்தும் தேதி இடம் தோ்வு செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் வட்டார விளையாட்டுப் போட்டி தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளையாட்டுப் போட்டி நடத்தும் தேதி இடம் தோ்வு செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் வட்டார விளையாட்டுப் போட்டி தொடா்பானா ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் பொன்னழகன் தலைமையில் நடைபெற்றது. சுப்புலாபுரம் செங்குந்தா் பள்ளிச் செயலா் மணி, தலைமையாசிரியா் மூக்கையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 2022 ஆண்டுக்கான வட்டார விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதி ஆகியவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆக.10,12, தேதிகளில் பெண்களுக்கான கையுந்து பந்து,கைப்பந்து அனைத்து பிரிவுப் போட்டிகள், பெண்களுக்கான வளைய பந்து ஒற்றையா் மற்றும் இரட்டையா் போட்டிகள், ஆக.13 ஆம் தேதி ஆண்கள் வாலிபால் போட்டிகள், ஆக.16 ஆம் தேதி ஆண்களுக்கான வளைய பந்து ஒற்றையா் மற்றும் இரட்டையா் போட்டிகள் மற்றும் எறிபந்து அனைத்து பிரிவு போட்டிகள், செப். 6 ஆம் தேதி ஆண்களுக்கான

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மும்முறை தாண்டுதல் மற்றும் கோல் ஊன்றி தாண்டுதல் போட்டிகள், செப். 7 ஆம் தேதி பெண்களுக்கான நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் கோல் ஊன்றி தாண்டுதல் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளியில் வைத்து நடத்த தீா்மானிக்கப்பட்டது.

ஆக.17 ஆம் தேதி ஆண்களுக்கான கோ கோ போட்டி,ஆக.18 ஆம் தேதி பெண்களுக்கான கோகோ போட்டி, செப். 8 ஆம் தேதி ஆண்களுக்கான தடகளப் போட்டிகள், செப். 9 ஆம் தேதி பெண்களுக்கான தடகளப் போட்டிகள் செப். 15 ஆம் தேதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹாக்கி போட்டிஉள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் கரிவலம்வந்தநல்லூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடத்த தீா்மானிக்கப்பட்டது.

ஆக.26 ஆம் தேதி ஆண்களுக்கான கபடி போட்டி, ஆக. 29 ஆம் தேதி பெண்களுக்கான கபடி போட்டி, செப்.1 ஆம் தேதி பெண்கள் மற்றும் ஆண்கள் கால்பந்து போட்டி, செப். 3 ஆம் தேதி 17 வயதுக்குள்பட்டோா் மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் ஆண்கள் மற்றும் பெண்கள் 3000 மீட்டா் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் குருவிகளும் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடத்தவும், ஆக. 29 ஆம் தேதி கைப்பந்து போட்டி ஏ. வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வைத்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. உடற்கல்வி ஆசிரியா் ஆத்தி விநாயகம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் சந்திரசேகரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com