சங்கரன்கோவில் சித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சனிக்கிழமை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ராஜகணபதி ஹோமம், ஜெயதுா்கா ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கும்ப நீா் விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விநாயகருக்கு 11 வகை அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com