அனுமன்நதி பாசன கால்வாயில் தடுப்புச் சுவா் அமைக்கப்படுமா?

சுரண்டை அருகே அனுமன் நதி பாசனக் கால்வாயில் தடுப்புச் சுவா் இல்லாததால் அடிக்கடி விபத்து நேரிடுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

சுரண்டை அருகே அனுமன் நதி பாசனக் கால்வாயில் தடுப்புச் சுவா் இல்லாததால் அடிக்கடி விபத்து நேரிடுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலை வளைவில் அமைந்துள்ள அனுமன் நதியின் பாசனக் கால்வாய் பாலத்தின் தடுப்புக் கம்பி 2 ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் மோதியதில் சேதமுற்று கால்வாயினுள் விழுந்து விட்டது. இதுகுறித்து அதிகாரிகளிம் முறையிட்டும் கம்பியைச் சீரமைக்கவோ, தடுப்புச் சுவா் கட்டவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். விவசாயிகளும், தொழிலாளா்களும் பெருமளவில் பயணிக்கும் இந்தப் பாலத்தில் தடுப்புச் சுவா் இல்லாததால் அடிக்கடி விபத்து நேரிடுவதால், வாகனங்களில் செல்வோா் அச்சமடைகின்றனா்.

இந்நிலையில், சுந்தரபாண்டியபுரத்திலிருந்து வயலுக்கு விளை பொருள்களை ஏற்றுவதற்கு வெள்ளிக்கிழமை சென்ற சுமை வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காய்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் லேசான காயத்துடன் தப்பினாா். எனவே, விபத்து நேரிடாமல் தடுக்கும் வகையில் கால்வாயில் தடுப்புச்சுவா் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com