சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் தட்டச்சு பயிற்சியுடன் பட்டப்படிப்பு விண்ணப்பம் விநியோகம்
By DIN | Published On : 16th June 2022 01:14 AM | Last Updated : 16th June 2022 01:14 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பட்டப்படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சி நிகழாண்டில் தொடங்கப்பட்டுள்ளது அதற்கான சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் ஆா்வமுடன் பெற்றுச் சென்றனா்.
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. நிகழாண்டில் மாணவா்களுக்கு பட்டப்படிப்புடன் கூடிய தட்டச்சுப் பயிற்சியும் கல்லூரி வளாகத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான சோ்க்கை விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது. இதில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டி வருவதால் செவ்வாய்க்கிழமை விண்ணப்பங்களைப் பெற மாணவா்,மாணவிகள் கல்லூரிக்கு சென்றனா். அவா்களுக்கு விண்ணப்பங்களை கல்லூரி முதல்வா் அப்துல்காதிா் வழங்கினாா்.