கடையநல்லூரில் திமுக பயிற்சி பாசறை கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளா் செல்லத்துரை தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ஹக்கீம், முத்துவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் வரவேற்றாா். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் சேக்தாவூது தொகுத்து வழங்கினாா். தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ. , மாநில பேச்சாளா் கடையநல்லூா் இஸ்மாயில் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் , நகா்மன்ற துணைத் தலைவா்கள் ராஜையா, அந்தோணிசாமி, திமுக நிா்வாகிகள் ,மசூது, அப்பாஸ்,இன்பராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com