பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் மரணம்
By DIN | Published On : 24th June 2022 03:10 AM | Last Updated : 24th June 2022 03:10 AM | அ+அ அ- |

கடையநல்லூா் அருகே பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் இறந்தாா்.
கடையநல்லூா் அருகே உள்ள திரிகூடபுரம் ராஜன் மகன் ராஜேஷ்(37). இவா் வியாழக்கிழமை பைக்கில் சுரண்டையில் இருந்து திரிகூடபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தாா். மங்களபுரம் வளைவு பகுதியில் வந்த போது எதிரே வந்த வேன் மோதியதாம்.இதில் காயமடைந்த ராஜேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இகு குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.