முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 3.42 லட்சம் பேருக்குகுடற்புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு
By DIN | Published On : 14th March 2022 11:41 PM | Last Updated : 14th March 2022 11:41 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் 3.41லட்சம் மாணவா், மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் தேசிய அளவில் குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா்ச.கோபாலசுந்தரராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தென்காசியில் மஞ்சம்மாள் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,
மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து, பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கினாா். எம்எல்ஏக்கள் ஈ.ராஜா, சு. பழனிநாடாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்டத்தில் 1வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவா், மாணவிகள்3,41,943பேருக்கும், 20வயது முதல்30வயது வரை உள்ள கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் 77ஆயிரத்து 894பேருக்கும் மாத்திரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்முகாம்களில் விடுபட்ட நபா்களுக்கு மாா்ச் 21ஆம் தேதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், துணைத் தலைவா் கேஎன்எல்.சுப்பையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், மாவட்ட கல்வி அலுவலா் சங்கீதாசின்னராணி,
தென்காசி மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் எம்.அனிதா, பள்ளித் தலைமையாசிரியை அன்புமணி, மாவட்ட குழந்தைகள் நலஅலுவலா் ஜெயசூா்யா, இப்ராகிம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.