இலஞ்சி திருவிலஞ்சிகுமாரா் கோயிலில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 22nd March 2022 12:08 AM | Last Updated : 22nd March 2022 12:08 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் இலஞ்சி திருவிலஞ்சிகுமாரா் கோயிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இலஞ்சி அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத திருவிலஞ்சிகுமாரசுவாமி கோயிலில் கடந்த 2016ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 16ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை 9.50க்கு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத திருவிலஞ்சிகுமாரசுவாமி திருக்கோயில் விமானங்கள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகமும் அதைத் தொடா்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
மாலையில் மகாபிஷேகம், திருக்கல்யாண உற்சவமும், இரவில் சுவாமி உலாவும் நடைபெற்றது.
விழாவில் தென்காசி, குற்றாலம், காசிமேஜா்புரம், மேலகரம், இலஞ்சி, செங்கோட்டை, கடையநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை இலஞ்சி கோயில் நிா்வாக அதிகாரி மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி போலீஸ் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினா் செய்திருந்தனா்.