முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
தென்காசி அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா
By DIN | Published On : 13th May 2022 01:14 AM | Last Updated : 13th May 2022 01:14 AM | அ+அ அ- |

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் இரா. ஜெஸ்லின் தலைமை வகித்து செவிலியா்களின் அயராத பணியினை பாராட்டி பேசினாா். தென்காசி மாவட்ட இணை இயக்குநா் செல்வராஜ், உறைவிட மருத்துவா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செவிலியா்கள் அனைவரும் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி, மருத்துவமனை வளாகத்தினுள் ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து செவிலியா் தின சிறப்பு உறுதிமொழி ஏற்றனா். செவிலியா் கண்காணிப்பாளா்கள் பத்மா, திருப்பதி , ராஜாதி ஜெகதா, முத்துலட்சுமி, வசந்தி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
சுகுணா, ரெனிஸ் பொன்ராணி ஆகியோா் சிறப்புரையாற்றினா். தூய மேரி செவிலியா் பயிற்சி கல்லூரி தாளாளா் பவுலின் சொா்ணலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிகளை உமாமஹேஸ்வரி, சண்முகப்ரியா ஆகியோா் தொகுத்து வழங்கினா். சுரேஷ்குமாா் வரவேற்றாா். சுதா நன்றிகூறினாா்.